நாடு முழுவதும் கடந்த மூன்றரை ஆண்டில் 55,369 திருட்டு, 1,570 கொள்ளை, 11,788 பேர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதும் கடந்த மூன்றரை ஆண்டில் 55,369 திருட்டு, 1,570 கொள்ளை, 11,788 பேர் கைது

புதுடெல்லி: இந்திய ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிபரபடி, கடந்த மூன்றரை ஆண்டில் ரயிலில் 55,369 திருட்டு, 1,570 வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ெதாடர்புடைய 11,788 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம், கடந்த 2017 செப்டம்பர் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில், நாடு முழுவதும் நடந்த விபத்து குறித்த அறிக்கையை வௌியிட்டுள்ளது.

அதில், 75 ரயில் விபத்துகளில், 40 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 26ம் தேதி உத்தரபிரதேசத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில், 13 குழந்தைகள் பலியாகியது ெபரிய சம்பவமாக கருதப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் குறைவான விபத்துகள் பதிவான ஆண்டாக கடந்த ஆண்டு அமைந்துள்ளது. முன்னதாக கடந்த 2016-17ம் ஆண்டு காலத்தில் நிகழ்ந்த 80 விபத்துகளில், 249 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

கடந்த 2013-14ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த 139 விபத்துகளில் 275 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 2014-15ம் ஆண்டில் 108 விபத்துகளும், 196 உயிரிழப்புகளும் நிகழ்ந்து உள்ளன.இதைபோல், ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்கும் போது நடந்த விபத்துகளும் கடந்த ஆண்டில் வெறும் 8 மட்டுமே பதிவாகி உள்ளது. அதே, 2013-14ம் ஆண்டில் 52, 2014-15ம் ஆண்டில் 39, 2015-16ம் ஆண்டில் 23, 2016-17ம் ஆண்டில் 13 விபத்துகள் நடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்துகள் ஒருபக்கம் இருந்தாலும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்களும் ரயிலில் நடப்பதும், அதனால் பயணிகள் பாதிப்பதும் வாடிக்கையாக உள்ளது. அதில், கடந்த 2015ம் ஆண்டில், 12,592 லக்கேஜ் திருட்டு, பயணிகளிடம் இருந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி என, 555 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,151 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டில், 14,619 லக்கேஜ் திருட்டு, பயணிகளிடம் இருந்து திருட்டு, வழிப்பறி, கொள்ளை என 441 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,361 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேேபால்,  கடந்த 2017ம் ஆண்டில், 18,936 லக்கேஜ் திருட்டு, பயணிகளிடம் இருந்து  திருட்டு, வழிப்பறி, கொள்ளை என 415 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,898  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தாண்டு, கடந்த ஜூன் வரை, 9,222 லக்கேஜ் திருட்டு, பயணிகளிடம் இருந்து  திருட்டு, வழிப்பறி, கொள்ளை என 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,378  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக, 55,369 திருட்டு வழக்குகளும், 1,570 வழிப்பறி, கொள்ளை வழக்குகளும் கடந்த மூன்றரை ஆண்டில் பதிவு செய்யப்பட்டு, 11,788 பேர் கைதாகி உள்ளனர்.

இதில், அதிகபட்சமாக மத்திய ரயில்வேயில் 3,907, மேற்கு ரயில்வேயில், 2,844, வடக்கு ரயில்வேயில், 2,480, தெற்கு ரயில்வேயில், 2,093 சம்பவங்களும் நடந்துள்ளன. இச்சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக, அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து, ரயிலில் ரோந்து பணிகளுக்கு போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய ரயில்வே ஸ்டேசன்களில், 394 பிளாட்பார்ம்களில் சிசிடிவி கேமாராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ரயில் பயணிகள் தங்களது பயணத்தின் போது, ஏதேனும் அவசர தகவல் என்றால், 182 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும், ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


.

மூலக்கதை