2ம் நாளாக டெல்லியில் நிலநடுக்கம்: இன்று காலை 3.6 ரிக்டர் பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
2ம் நாளாக டெல்லியில் நிலநடுக்கம்: இன்று காலை 3.6 ரிக்டர் பதிவு

புதுடெல்லி: டெல்லியில், இரண்டாம் நாளாக இன்றும் நிலநடுக்கம் உணரப்பட்டதால், மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நிலநடுக்கம், 3. 6 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளது.   டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 3. 6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் மீரட்டிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கார்காவ்டா பகுதியை மையமாக கொண்டு நிகழ்ந்ததாக அமெரிக்க புவிசார் மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், சிலர் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். முன்னதாக நேற்று மாலை, தலைநகர் டெல்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தவர்கள், சமூக வலைதளங்களில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 2 நாட்களாக நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்டதால், மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவி வருகிறது.


.

மூலக்கதை