பரிசில் தாக்குதல்! - விரிவான தகவல்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிசில் தாக்குதல்!  விரிவான தகவல்கள்!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசில் நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்புக்கம்பியை பயன்படுத்தி ஏழுபேரை தாக்கியுள்ளான். இதில் நால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர். இது குறித்த செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம். தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை 22.45 மணிக்கு தாக்குதல் ஆரம்பித்திருந்தது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Basin of La Villette அருகே முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 
 
22.45 மணிக்கு MK2 Cinema திரையரங்கில் இருந்து வெளியேறிய மூவரை முதலில் தாக்கியுள்ளான். அருகில் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிலர் இந்த தாக்குதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தாக்குதலாளியை தடுத்து நிறுத்தும் முகமாக அவனை தள்ளி வீழ்த்தியதாகவும், பந்தால் அவன் மேல் எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் கையில் கத்தி வைத்திருந்ததால் அருகே நெருங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பின்னர் தாக்குதலாளி அங்கிருந்து rue Henri Nogueres வீதிக்குச் சென்றுள்ளான். அங்கு பிரித்தானியாவைச் சேர்ந்த இருவரை கத்தியால் தாக்கியுள்ளான். ஒருவருக்கு மார்புப்பகுதியிலும், பிறிதொருவருக்கு தலையிலும் கத்தியால் குத்தியுள்ளதாக அறிய முடிகிறது. 
 
Rue Henri Nogueres வீதி மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியிருந்தது. காயமடைந்த நபர்கள் வீதியில் விழுந்து கிடந்தனர். தாக்குதலாளி மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலாளியை சுற்றி வளைக்க பொதுமக்கள் முயன்றனர். அதற்குள்ளாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக வந்தனர்.
 
தாக்குதலாளி கையில் 30cm நீளமுள்ள கூரான கத்தி ஒன்றை வைத்திருந்துள்ளான். பின்னர் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். 31 வயதுடைய ஆஃப்கானிஸ்தான் குடியுரிமை கொண்டவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை