கடைசி டெஸ்ட்: இந்திய அணிக்கு கடின இலக்கு

தினமலர்  தினமலர்
கடைசி டெஸ்ட்: இந்திய அணிக்கு கடின இலக்கு

லண்டன் : இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ரூட், குக் அசத்தல் சதம் கைகொடுக்க இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் 4 போட்டிகளின் முடிவில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைபற்றியது. இந்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332, இந்தியா 292 ரன்கள் எடுத்தன.

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில், கேப்டன் ரூட், கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் குக் ஆகியோரின் அசத்தல் சதம் கைகொடுக்க 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து இந்திய அணி 464 ரன்கள் எடும் கடின இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வருகிறது.

மூலக்கதை