சென்செக்ஸ் 467 புள்ளிகள் வீழ்ச்சி

தினமலர்  தினமலர்
சென்செக்ஸ் 467 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல்நாளில் கடும் சரிவை சந்தித்தன. கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் 467 புள்ளிகளும், நிப்டி 151 புள்ளிகளும் சரிந்தன.

அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து இருப்பதாலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 72.45-ஆக வீழ்ச்சி கண்டது, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான நடப்பு கணக்கு பற்றாக்குறை 15.8 பில்லயன் டாலராக உயர்ந்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் ஆரம்பம் முதலே கடும் சரிவை சந்தித்தன. தொடர்ந்து வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 467.65 புள்ளிகள் சரிந்து 37,922.17-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 151 புள்ளிகள் சரிந்து 11,438.10-ஆகவும் முடிந்தன.

மூலக்கதை