யாழில் திருமணத்திற்கு சென்ற 700 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் திருமணத்திற்கு சென்ற 700 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!!

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடந்த நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்திருந்தன.
 
அதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அது தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளனர்.
 
சுகாதாரப் பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகள் மேற்கொண்டனர்.
 
அங்கு சற்றுப் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டுள்ளது. இதனால் பொலிஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
 
700 பேருக்கான உணவுக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்திருந்தது என்றும் கூறப்படுகின்றது.

மூலக்கதை