மணிப்பூரில் மாநிலத்தில் இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்தோரின் நினைவாக மாரத்தான் ஓட்டம்

தினகரன்  தினகரன்
மணிப்பூரில் மாநிலத்தில் இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்தோரின் நினைவாக மாரத்தான் ஓட்டம்

மணிப்பூர்: இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்தோரின் நினைவாக மணிப்பூர் மாநிலத்தில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. காக்சிங் மாவட்டத்தில் இருந்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர்களை நினைவு கூறும் வகையில் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த மாரத்தான் ஓட்டம் 11 கிலோ மீட்டர் தூரம் மலைப்பகுதியிலும், 14 கிலோ மீட்டர் தூரம் பள்ளத்தாக்கு பகுதியிலும் ஓட வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

மூலக்கதை