கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ: கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறல்

தினகரன்  தினகரன்
கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ: கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறல்

கலிபோர்னியா: அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர். வடக்கு கலிபோர்னியா வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 40,500 ஏக்கர் பரப்பளவிலான தாவரங்கள் எரிந்து சாம்பலாயின. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் வசித்து வந்த மக்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக அருகில் உள்ள சாக்கிராமண்டோ நதியில் இருந்து நீரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் காற்றின் வேகத்தினால் தீ பரவும் வேகமும் அதிகமாக இருக்கிறது. எனவே தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் திணறி வருகின்றனர்.

மூலக்கதை