விசாரணை ஆணையத்தில் ஜெ., தனி செயலாளர், அப்போலோ டாக்டர்கள் ஆஜர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விசாரணை ஆணையத்தில் ஜெ., தனி செயலாளர், அப்போலோ டாக்டர்கள் ஆஜர்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்த சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சில நிமிடங்களில் திரும்பி சென்றார். குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தி வருவதால் வேறொரு தேதியில் ஆஜராக அவருக்கு இ-மெயில் அனுப்பப்பட்டது.

அதை பார்க்காததால் சில நிமிடங்களில் திரும்பி சென்றது தெரியவந்தது.   இதையடுத்து, அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதனிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

இதையடுத்து, இன்று ஜெயலலிதாவின் தனி செயலாளராக பணியாற்றிய ராமலிங்கம் ஐஏஎஸ், அப்போலோ மருத்துவமனை தலைமை பிசியோதெரப்பிஸ்ட் பிரசன்னா, இருதய நோய் சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி இன்று இவர்கள் அனைவரும் காலை 10. 25 மணிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர்.

அவர்களிடம் நீதிபதி ஆறுமுகச்சாமி மற்றும் வக்கீல்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை