5-வது டெஸ்ட் போட்டியில் விஹாரியின் ஆட்டத்தை பொறுக்க முடியாமல் ஸ்டோக்ஸ் தகராறு... கோலி தலையிட்டு சமாதானம்

தினகரன்  தினகரன்
5வது டெஸ்ட் போட்டியில் விஹாரியின் ஆட்டத்தை பொறுக்க முடியாமல் ஸ்டோக்ஸ் தகராறு... கோலி தலையிட்டு சமாதானம்

லண்டன்: ஓவலில் நடந்து வரும் 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் விஹாரியின் செயலைக் பொறுக்க முடியாத இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் அவருடன் மோதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றுவிட்டது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமா விஹரி களமிறங்கியுள்ளார். முதல் போட்டியிலேயே அசத்தலாக பேட் செய்த விஹாரி 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை ஹூக் ஷாட் முறையில் விஹாரி லாங் லெக்கில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதைப் பார்த்து பொறுக்க முடியாத ஸ்டோக்ஸ் அந்த ஓவர் முடிந்தவுடன் விஹாரியுடன் தகராறில் ஈடுபட்டார். அதை விஹாரி தவிர்த்த போதிலும் ஸ்டோக்ஸ் தொடர்ந்து பேசியதையடுத்து கேப்டன் விராட் கோலி தலையிட்டதையடுத்து ஸ்டோக்ஸ் விலகிச் சென்றார்.இந்த சம்பவம் குறித்து ஹனுமா விஹாரி டெஸ்ட் போட்டியில் நான் முதன் முதலில் களமிறங்கிய எனக்கு விராட் கோலியின் அறிவுரை மிகவும் உதவியாக இருந்தது. எனக்கு மறுமுனையில் ஆடிய விராட் கோலி அவ்வப்போது எனக்கு டிப்ஸ் அளித்துக்கொண்டே இருந்தார். இதனால் எனக்கு இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள எளிதாக இருந்தது. பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் நான் சிக்ஸர் அடித்தவுடன் அவர் என்னிடம் வந்து வாக்குவாதம் செய்தார். அதை நான் தவிர்க்க முயன்றும் என்னுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதைப் பார்த்த விராட் கோலி தலையிட்டுக் கேட்டபோது ஸ்டோக்ஸ் விலகிச் சென்றார். பதற்றமாக இருந்த எனக்கு அந்த நேரத்தில் விராட் கோலி தான் எனக்கு ஊக்கமளித்தார்.இந்திய டெஸ்ட் அணியில் என்னைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்து. இந்திய அணியில் இடம் பிடிப்பது எனது கனவாக இருந்தது. அதனால்தான் கிரிக்கெட்டை சிறுவயதில் இருந்தே விளையாடி வருகிறேன். இந்திய அணியில் கிடைத்த இடத்தைத் தக்கவைக்க நான் விரும்புகிறேன். அதற்கு ஏற்றார்போல் முதல் போட்டியிலேயே நான் அரைசதம் அடித்திருக்கிறேன். அதிகமான ரன்கள் குவிப்பதே எனது இலக்காகும். கடந்த 2013, 2015-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் நான் தேர்வு செய்யப்படும் அணியில் களமிறங்க எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் எனக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். நான் ஏராளமான கடினமான சூழல்களைக் கடந்து வந்திருக்கிறேன். இந்தப் போட்டியில்கூட நான் கடினமான சூழல்களைச் சந்தித்துள்ளேன். இந்திய ஏ அணிக்காக விளையாடியபோதிலும் இதே சூழல்தான் இருந்தது. இந்த அனுபவங்கள்தான் எனக்கு இந்திய அணியில் இடம் பெற்று முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடத் துணை புரிந்தத என விஹாரி தெரிவித்தார்.

மூலக்கதை