முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மகனுக்கு திருமணம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மகனுக்கு திருமணம்!!

நேற்று முன்தினம் சனிக்கிழமை, முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகனுக்கு திருமணம் இடம்பெற்றது. இதில் பிரான்சுவா ஒலோந்துவின் முன்னாள் மனைவியும் கலந்துகொண்டார். 
 
பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகன் தோமஸ் ஒலோந்துவுக்கும், பிரபல ஊடகவியலாளரான Emilie Broussouloux க்கும் சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றது. திருமணம் Meyssac (Corrèze) நகரில் இடம்பெற்றது. இது ஒலோந்துவின் சொந்த ஊர் ஆகும். பிரான்சுவா ஒலோந்துக்கும் அவரது முன்னாள் மனைவி Ségolène Royalக்கும் பிறந்த தோமஸ் ஒலோந்து, ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திருமணம் இடம்பெற்ற இடத்துக்கு பிரான்சுவா ஒலோந்து மற்றும் அவரின் முன்னாள் மனைவி இருவரும் ஒரே மிகிழுந்தில் வந்து இறங்கினார்கள். மணமகன் 33  வயதுடையவர், மணமகள் 27 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை