கலிபோர்னியாவில் நடைபெற்ற அலைச்சறுக்குப் போட்டி கோலாகலம்

தினகரன்  தினகரன்
கலிபோர்னியாவில் நடைபெற்ற அலைச்சறுக்குப் போட்டி கோலாகலம்

அமெரிக்கா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அலைச்சறுக்குப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இது பார்ப்போர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதில் பிரேசிலைச் சேர்ந்த வீரர் கேபிரியல் மெடினா முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு மொத்தம் 17.86 புள்ளிகள் பெற்று முதல் பரிசை வென்றார். அலைகளின் வேகத்திற்கேற்ப வேகமாக பாய்ந்த அவர் குடையைப் போல் கவிழும் அலைகளின் உள்ளே போய் வெளியே வந்த காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. மேலும் பெண்களுக்கான அலைச்சருக்கு போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த காரிசா மூர் இதே போன்ற சாகசத்தை செய்து முதலிடம் பெற்றுள்ளார். வீரர்களின் சாகசத்தை கண்டு பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்த்தியது.

மூலக்கதை