செலவுகளை குறைங்க: தேர்தல் கமிஷனுக்கு காங்., கடிதம்

தினமலர்  தினமலர்
செலவுகளை குறைங்க: தேர்தல் கமிஷனுக்கு காங்., கடிதம்

புதுடில்லி: விரைவில் நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தல்களில் செலவுகளை குறைக்க தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்துக்கு காங்.,கட்சி எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ம.பி., ராஜஸ்தான், மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இந்த மாநிலங்களில் அரசு சார்பில் ஜன் ஆசிர்வாத் யாத்ரா, கவுரவ் யாத்ரா, மற்றும் விகாஷ்யாத்ரா என்ற பெயரில் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த யாத்திரைகளில் பொது மக்கள் ஆர்வம் காட்ட வில்லை . யாத்திரை என்ற பெயரில் செலவிடப்படும் அனைத்து பொது செலவினங்களையும் நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
வரும் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் சட்டீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை