வன உயிரின வேட்டை கும்பல் ...நடமாட்டம்: ஆட்டோவில் துப்பாக்கியுடன் உலா

தினமலர்  தினமலர்

கன்னிவாடி:டி.பண்ணைப்பட்டி பகுதிகளில், வன உயிரின வேட்டைக்காக ஆட்டோக்களில் மர்ம கும்பலின் நாட்டு துப்பாக்கியுடன் வருவோர் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மயில், கடமான், காட்டு மாடுகள் போன்ற வன உயிரினங்கள் அதிகளவில் உள்ளன. யானைகளும் சீசன் நாட்களில் மலையடிவார கிராமங்களில் உலா வருவது வழக்கம். மயில், மான் போன்றவைகள், வனப்பகுதியில் இருந்து மலையடிவார விளைநிலங்களில் தஞ்சமடைந்துள்ளன.
இவற்றை கண்காணிக்க ஆள் இல்லா ரோந்து விமானங்கள் வழங்கப்பட்டிருந்தபோதும், வனத்துறை அலட்சியம் வேட்டை தொடர்கிறது. பெயரளவு ரோந்துப்பணிகளால், மயில்கள் உள்ளிட்ட வன உயிரின வேட்டை தாராளமாக நடக்கிறது.
கன்னிவாடி இயற்கை ஆர்வலர் சக்திவேல்,''பன்றிமலை, ஆடலுார், தோணிமலை, குட்டிக்கரடு பகுதிகளில் விஷமிகளால் வைக்கப்படும் தீ காரணமாக, மான், மயில் உள்ளிட்டவை மலையடிவார கிராமங்களுக்கு வந்து விட்டன. ஆட்டோக்களில் வரும் வெளியூர் நபர்கள், நாட்டுத்துப்பாக்கியுடன் உயிரினங்களை வேட்டையாட ஆத்துார், பாலத்துப்பட்டி, வேலன்சேர்வைகாரன்பட்டி, வண்ணம்பட்டி, தருமத்துப்பட்டி கோம்பை, கசவனம்பட்டி, டி.பண்ணைப்பட்டி, வெள்ளமடத்துப்பட்டி பகுதிகளில் வலம் வருகின்றனர். இவற்றை தடுக்க , மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்,'' என்றார்.

மூலக்கதை