கொள்ளையடிக்க வந்துட்டு தலை தெறிக்க ஓடிய திருடன்..!!

PARIS TAMIL  PARIS TAMIL
கொள்ளையடிக்க வந்துட்டு தலை தெறிக்க ஓடிய திருடன்..!!

கொள்ளையடிக்க வந்த ஒரு திருடன் துப்பாக்கியை தவற விட்டு விட்டு தலைதெறிக்க ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
 
துப்பாக்கியை காட்டி வங்கி மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் திருடர்கள் கொள்ளையடிப்பது வெளிநாடுகளில் அடிக்கடி நடக்கும் சம்பவம். 
 
இந்நிலையில், கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஒரு நிறுவனத்தில் நுழையும் திருடன், அங்கிருக்கும் ஒரு பெண்ணிடம் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து மிரட்ட முயல்கிறான். ஆனால், கையிலிருந்த துப்பாக்கி கைதவறி கீழே விழுந்து விடுகிறது. 
 
அவன் துப்பாக்கியை எடுப்பதற்குள் அந்த பெண் துப்பாக்கியை எடுத்துவிட, திருடன் விட்டானே ஒரு ஓட்டம். பேண்ட் கழண்டு விழுவதை கூட பொருட்படுத்தாமல் அவன் ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
 
 

மூலக்கதை