சட்டசபை தேர்தல் : முதல் வாய்ப்பு தெலுங்கானாவுக்கு

தினமலர்  தினமலர்
சட்டசபை தேர்தல் : முதல் வாய்ப்பு தெலுங்கானாவுக்கு

புதுடில்லி: கலைக்கப்பட்ட தெலுங்கானா சட்டசபைக்கு முதலில் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முன்னுரிமை அளிக்க உள்ளது.
ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான்,மிசோரம் மாநில சட்டசபைகளின் பதவிகாலம் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முடிவடைகின்றன. விரைவில் இம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இம் மாநிலங்களுடன் சேர்ந்து தெலுங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் நடத்த ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி கடந்த 6-ம் தேதி சட்டசபையை கலைத்தது. இது குறித்த அறிவிப்பும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் தேர்தல் நடத்த உள்ள சூழ்நிலைகள் குறித்து ஆராய தேர்தல் குழுவினர் நாளை 11-ம் தேதி தெலுங்கானா மாநிலத்திற்கு செல்ல உள்ளனர். அதே நேரத்தல் மாநில தேர்தல் அதிகாரி ரஜத் குமார் இன்று 10ம் தேதி புதுடில்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் மாநிலங்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு அக்டோபர் கடைசி வாரம் அல்லது நவம்பர் முதல்வாரத்தில் வெளியிடப்பட்டு டிசம்பருக்குள் தேர்தல் நடத்தி முடிக்க ஆய்வு செய்து வருகிறது.
அதற்கு முன் தெலுங்கானா மாநிலத்திற்கு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்பட்டு நவம்பர் கடைசி வாரத்தில் தேர்தல் நடத்த சாத்தியகூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை