யாழில் வன்முறையால் ஏற்பட்ட பதற்றம்! பொலிஸாரின் கட்டுப்பாட்டில் பொது மக்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் வன்முறையால் ஏற்பட்ட பதற்றம்! பொலிஸாரின் கட்டுப்பாட்டில் பொது மக்கள்

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
 
வன்முறையில் ஈடுபட்ட சுமார் 75 க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
 
எனினும் மோதல் சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
 
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை