இலங்கைக்கு படையெடுக்கும் ஐரோப்பிய நாட்டவர்கள்...!!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கைக்கு படையெடுக்கும் ஐரோப்பிய நாட்டவர்கள்...!!

இலங்கையில் கடந்த மாதம் சுற்றுலாப்பயணிகளின் வருகை 5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தகவல்களுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு மொத்தமாக 2 லட்சத்து 359 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை 5 சதவீத வளர்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்களில் அதிகமானவர்கள் இந்தியர்களாவர்.
 
அவர்களைத் தொடர்ந்து சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருக்கின்றனர். 

மூலக்கதை