போர்வெல் லாரிகள் ஸ்டிரைக் துவக்கம்

தினமலர்  தினமலர்
போர்வெல் லாரிகள் ஸ்டிரைக் துவக்கம்

மதுரை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரையில் போர்வெல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர்.இம்மாவட்டத்தில் 250 போர்வெல் லாரிகளில் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே லாரிகளை நிறுத்தி வேலை நிறுத்தம் துவக்கினர். மாவட்ட தலைவர் சுரேஷ் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மீதான விலையை தினமும் நிர்ணயிப்பதால் போர்வெல் தொழில் பாதிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயிக்கலாம். போர்வெல் கட்டணத்தில் 12 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என்றார். சங்க செயலர் மோகன், பொருளாளர் மாரியப்பன், துணை தலைவர் சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் ரவி, முருகேசன் பங்கேற்றனர்.

மூலக்கதை