‘திருடன்’ என திட்டித் தீர்த்த செரீனா

தினகரன்  தினகரன்
‘திருடன்’ என திட்டித் தீர்த்த செரீனா

நியூயார்க்:போர்ச்சுகலை சேர்ந்த நடுவர் ராமோஸ் ஒரு புள்ளி அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்த செரீனா, ‘நீங்கள் ஒரு பொய்யர்... திருடர், நான் விளையாடும் போட்டிகளில் இனி வாழ்நாளில் நீங்கள் நடுவராக இருக்க முடியாது. என்னிடம் எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறீர்கள்... சாரி சொல்லுங்கள்’ என்று கடுமையாக வாக்குவாதம் செய்தார். போட்டி முடிந்த பின்னர் இது குறித்து கூறுகையில், ‘நடுவர்கள் வீராங்கனைகளிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். எந்த ஒரு வீரருக்கும் இது வரை ராமோஸ் ஒரு கேம் அபராதம் விதித்தது இல்லை. நான் ஒரு பெண் என்பதால் தான் அவர் இப்படி நடந்துகொண்டுள்ளார். மகளிர் உரிமைகளுக்காகவும், எங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதற்காகவே இங்கு குரல் கொடுக்கிறேன்’ என்றார். ரசிகர்களும் நடுவர் ராமோசுக்கு எதிராக கூக்குரலிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் களத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. செரீனாவுக்கு ஆதரவாக பில்லி ஜீன் கிங் உட்பட பல முன்னாள் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை