பி.பி.எப்., முத­லீடு தொடர்­பாக அதிகம் அறி­யப்­ப­டாத அம்­சங்­கள்

தினமலர்  தினமலர்
பி.பி.எப்., முத­லீடு தொடர்­பாக அதிகம் அறி­யப்­ப­டாத அம்­சங்­கள்

பொது வருங்­கால வைப்பு நிதி­யான, பி.பி.எப்., அறி­மு­க­மாகி, 50 ஆண்­டு­கள் ஆகிறது. 1968ம் ஆண்டு அறி­மு­க­மான இந்த திட்­டம், அதிக ரிஸ்கை முத­லீட்­டா­ளர்­கள் பர­வ­லாக நாடும் திட்­ட­மாக இருக்­கிறது. மியூச்­சு­வல் பண்ட் உள்­ளிட்ட முத­லீட்டு வாய்ப்­பு­கள் மத்­தி­யி­லும் ஈர்ப்­பு­டை­ய­தாக தொட­ரும், பி.பி.எப்., திட்­டம் தொடர்­பாக அதிகம் அறிப்­ப­டாத அம்­சங்­கள்:

நீட்­டிப்பு வசதி


பி.பி.எப்., நீண்ட கால திட்­ட­மா­கும். 15 ஆண்­டு­களில் இது முடி­வ­டை­யும். 15 ஆண்­டில் முதிர்­வ­டை­யும் போது, இதில் சேர்ந்­துள்ள தொகையை, அதற்­கான வட்­டி­யு­டன் மொத்­த­மாக விலக்கி கொள்­ள­லாம் அல்­லது திட்­டத்தை மேலும் நீட்­டித்­துக்­கொள்­ள­லாம். புதிய டிபா­சிட்­கள் செய்து அல்­லது செய்­யா­ம­லேயே திட்­டத்தை, 5 ஆண்­டு­க­ளுக்கு நீட்­டிக்­க­லாம்.


பகுதி விலக்­கல் வசதி


இந்த திட்­டத்­தில் பகுதி விலக்­கல் வசதி உண்டு. அவ­ச­ர ­தேவை அடிப்­ப­டை­யில், திட்­டத்­தில் இணைந்த, ௭ ஆண்­டுக்கு பின் பகுதி விலக்­கல் சாத்­தி­யம். முந்­தைய ஆண்­டில் உள்ள தொகை­யில், 50 சத­வீ­தம் அல்­லது, விலக்கி கொள்­ளும் ஆண்­டுக்கு முந்­தைய நான்­காம் ஆண்டு இறுதி தொகை­யில், 50 சத­வீ­தம் விலக்கி கொள்­ள­லாம்.


வெளி­யேற்­றம்


15 ஆண்டு, ‘லாக் இன்’ காலம் உடையது என்­றா­லும், குறிப்­பிட்ட சூழல்­களில் பாதி­யில் வெளி­யே­ற­லாம். எனி­னும், ஐந்து நிதி­யாண்­டு­கள் முடிந்த பிறகே இது சாத்­தி­யம். உயி­ருக்கு அச்­சு­றுத்­த­லான நோய், உயர் கல்வி தேவை ஆகிய கார­ணங்­க­ளுக்­காக விலக்கி கொள்­ள­லாம். இதற்­கான முறை­யான ஆவ­ணங்­களை தாக்­கல் செய்ய வேண்­டும்.


கடன் வசதி

மூன்­றாம் ஆண்டு முதல், பி.பி.எப்., கணக்கு மீது, உறுப்­பி­னர் கடன் பெற­லாம். கடன் பெறு­வ­தற்கு முந்­தைய இரண்­டாம் ஆண்­டின் இறு­தி­யில், கணக்­கில் உள்ள தொகை­யில், 25 சத­வீ­தம் கட­னாக பெற­லாம். எனி­னும், ஏழாம் ஆண்­டுக்கு பிறகு, பகுதி விலக்­கல் செய்­ய­லாம் என்­ப­தால், அதன் பிறகு கடன் வசதி கிடை­யாது.

கணக்கு மாற்­றம்


பி.பி.எப்., கணக்கை அஞ்­ச­ல­கம் அல்­லது இந்த திட்­டத்தை வழங்­கும் வங்­கி­களில் துவக்­க­லாம். பணி­மாற்­றம் அல்­லது இட­மாற்­றம் கார­ண­மாக பி.பி.எப்., கணக்கை மாற்­றிக்­கொள்­ளும் வச­தி­யும் அளிக்­கப்­ப­டு­கிறது. வங்கி அல்­லது அஞ்­ச­லகத்­தில் இதற்­கான விண்­ணப்­பத்தை சமர்ப்­பிக்க வேண்­டும்.

மூலக்கதை