பாலிசியை புதுப்பிக்கும் வழி!

தினமலர்  தினமலர்
பாலிசியை புதுப்பிக்கும் வழி!

காப்­பீட்­டின் அவ­சி­யத்தை உணர்ந்­தி­ருப்­ப­தோடு, காப்­பீடு திட்­டங்­களை தொடர்ந்து பரா­ம­ரிப்­ப­தும் அவ­சி­யம். உரிய காலத்­தில் பிரீமி­யம் செலுத்­தா­விட்­டால் பாலிசி காலா­வ­தி­யா­கும் அபா­யம் உள்­ளது.


அண்­மை­யில், காப்­பீடு ஒழுங்­கு­முறை ஆணை­யம் வெளி­யிட்­டுள்ள தக­வல்­படி, புதிய பாலி­சி­களில், 25 சத­வீத பாலி­சி­கள் முத­லாண்­டுக்­குப்­பின் தொடரப்­ப­டு­வ­தில்லை என, தெரி­விக்­கிறது. குறைந்த பிரீமி­யம் பாலி­சி­களில் இது அதி­கம் என்­றும் தெரிய வந்­துள்­ளது.பாலிசி காலா­வ­தி­யாக அனு­ம­திப்­ப­தால், காப்­பீடு பெற்­ற­வர்­க­ளுக்கு தான் முழு இழப்பு. பொது­வாக, குறித்த காலத்­தில் பிரீமி­யம் செலுத்த தவறி, அதன் பிறகு வழங்­கப்­படும் சலுகை காலத்­தி­லும் இதை
செய்­ய­வில்லை எனில், பாலிசி காலா­வ­தி­யா­கும்.


இத­னால், ‘டெர்ம் பாலிசி’ எனில் முழு பல­னை­யும் இழக்க நேரி­டும். ‘யூலிப்’ திட்­டம் எனில், ‘லாக் இன்’ காலத்­தில் பிரீ­மி­யம் செலுத்த தவ­றி­னால், அது­வரை சேர்ந்த தொகையை கூட
பெற முடி­யாது. 5 ஆண்­டுகளுக்கு பிறகு எனில், பாலி­சியை ஒப்­ப­டைத்து, அதில் சேர்ந்­து உள்ள தொகையை பெற­லாம்.


வழக்­க­மான திட்­டங்­கள் எனில், ஆரம்ப காலங்­களில் காலா­வ­தி­யா­னால் அனைத்து பலன்­க­ளை­யும் இழக்க நேரி­ட­லாம். சரண்டர் மதிப்பு ஏற்­பட்­டுஇ­ருந்­தால் அதை பெற­லாம்.காப்­பீடு முக்­கி­ய­மான பாது­காப்பு என்­ப­தால், காலா­வ­தி­யான பாலி­சி­களை புதுப்­பித்து, தொடர்­வதே ஏற்­றது. பிரீ­மி­யம் தொகை மற்றும் அப­ரா­தம் செலுத்தி பாலி­சியை புதுப்­பிக்க இரண்டு ஆண்டு கால அவ­கா­சம் அளிக்­கப்­ப­டு­கிறது. அதை பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.


பாலி­சியை கைவி­டு­வ­தால் காப்­பீடு பாது­காப்பை இழப்­ப­தோடு, புதிய பாலிசி பெறு­வ­தாக இருந்­தால், அதற்­கான செலவு அதி­க­மாக இருக்­கும்.

மூலக்கதை