போலி துப்பாக்கியுடன் Louis Vuitton இல் கொள்ளையிட முயற்சித்த நபர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
போலி துப்பாக்கியுடன் Louis Vuitton இல் கொள்ளையிட முயற்சித்த நபர் கைது!!

பரிசில் உள்ள Louis Vuitton கடையில் இருந்து போலி துப்பாக்கி ஒன்றினால் மிரட்டி நபர் ஒருவர் கொள்ளையிட முயற்சித்துள்ளார். 
 
சோம்ப்ஸ்-எலிசேக்கு அருகில் உள்ள Avenue Montaigne இல் உள்ள Louis Vuitton ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் நேற்று சனிக்கிழமை நபர் ஒருவர் நுழைந்துள்ளார். போலி துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டிருந்து, அங்கிருந்த பை ஒன்றை திருடியுள்ளார். அங்கிருந்து கொள்ளையன் தப்பிச் செல்லும் போது அக்கடையின் உரிமையாளரின் மெய்பாதுகாவலர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். உடனடியாக காவல்துறையினரும் அழைக்கப்பட்டனர். 
 
பின்னர் குறித்த நபரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். அதில் அவரிடம் இருந்தது போலித்துப்பாக்கி என தெரியவந்துள்ளது. 8 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூலக்கதை