பரிசில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இயற்கை ஆர்வலர்கள்! - நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிசில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இயற்கை ஆர்வலர்கள்!  நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம்!!

பூமியின் தட்பவெப்ப நிலை குறித்து அரசு மெத்தனம் காட்டுவதாக தெரிவித்து நேற்று செப்டம்பர் 8 ஆம் திகதி சனிக்கிழமை பரிசில் மிகப்பெரும் கண்டணப்பேரணி இடம்பெற்றது. 
 
சனிக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக பரிசில் 50,000 பேர்வரை பேரணியில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 350.org எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். Place de l'Hotel de Ville இல் ஆரம்பித்த இந்த பேரணி, Place de la République வரை நீடித்தது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டன. அவர்கள் தெரிவித்த தகவல்களின் படி 18,500 பேர் வரை மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அறியமுடிகிறது. பூமி தட்பவெப்ப நிலை குறித்து பல வாசகங்களும், அரசின் மெத்தனமாக நிலையையும் கண்டித்து பல வாசகங்களை கொண்ட பதாகைகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
பரிசில் பேரணி இடம்பெற்ற அதேவேளை, மேலும் சில நகரங்களிலும் பேரணி இடம்பெற்றது. லியோன் நகரில் 10,000 பேர்வரை கலந்துகொண்டனர். மார்செயில் 2,500 பேர்வரை கலந்துகொண்டனர். புவி வேகமாக வெப்பமாகி வருவதாகவும், அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

மூலக்கதை