83 வயது பாட்டிக்கு 14 வயது சிறுவன் செய்த கொடூரம்..!!

PARIS TAMIL  PARIS TAMIL
83 வயது பாட்டிக்கு 14 வயது சிறுவன் செய்த கொடூரம்..!!

 

அமெரிக்காவில் 83 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 14 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்
 
Baltimore நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார் Dorothy Neal என்ற 83 வயது பாட்டி.
 
இவர், சில நாட்களாக குடியிருப்பை விட்டு வெளியே வராததையடுத்து, அருகில் வசிப்பவர்கள் இவரது வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது இறந்துகிடந்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொலிசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதே குடியிருப்பை சேர்ந்த Tyrone Harvin என்ற 14 வயது சிறுவன் இப்பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொலை செய்துள்ளான் என்பது தெரியவந்தது.
 
சிறுவனின் இந்த வெறிச்செயல் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இருப்பினும் தனது மகன் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவன் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றசாட்டினை முறையாக விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
 
தற்போது, இச்சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 

மூலக்கதை