இந்திராணிக்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுப்பு

தினமலர்  தினமலர்
இந்திராணிக்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுப்பு

மும்பை: இளம் பெண் ஷீனா போரோ கொலை குற்றவாளி இந்திராணிக்கு கோர்ட் ஜாமின் வழங்க மறுத்துவிட்ட.து.
கடந்த 2012-ம் ஆண்டு இளம் பெண் ஷீனா போரா ,25 ராய்காட் என்ற பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கடத்தி கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2015-ம் ஆண்டு அப்பெண்ணின் தாயார் இந்திராணி முகர்ஜி, இவரது இரண்டாவது கணவர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோரை கைது செய்தனர். மகளை தாயே கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்தது. இந்திராணி தற்போது மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.சிறையில் உயிருக்கு பாதுகாப்பில்லை எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என சி.பி..ஐ.கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி ஜக்டாலே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. வழக்கறிஞர் , "இந்தி ராணிக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்று ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரி வித்தார். இதை ஏற்ற நீதிபதி, இந்திராணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

மூலக்கதை