யு..எஸ். சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பானின் ஒசாகா : செரினா ஏமாற்றம்

தினமலர்  தினமலர்
யு..எஸ். சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பானின் ஒசாகா : செரினா ஏமாற்றம்

நியூயார்க்: யு.எஸ். ஓபன்-2018 டென்னிஸ் தொடரின் மகளிர் பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை ஜப்பானின் நவோமி ஒசாகா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவில் யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் மகளிர் பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜப்பானின் நவோமி ஓசாகா மோதினர். இதில் துவக்கத்தில் செரினா வில்லியம்ஸ் ஆதிக்கம் செலுத்தினார். சுதாரித்துக்கொண்ட ஒசாகா அடுத்தடுத்து, 6-2, 6-4, என இரண்டு செட்களில் செரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
20 வயதான நவோமி ஒசாகா முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் நுழைந்த முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையுடன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தனது லட்சிய கனவு நிறைவேற்றிவிட்டதாக ஒசாகா தெரிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவியத்துவங்கியுள்ளன.

மூலக்கதை