விமானநிலையங்களில் குறைந்தவிலை டீ, ஸ்நாக்ஸ் கவுன்டர்கள்

தினமலர்  தினமலர்
விமானநிலையங்களில் குறைந்தவிலை டீ, ஸ்நாக்ஸ் கவுன்டர்கள்

புதுடில்லி : விமான நிலையங்களில், டீ, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவைகளின் விலைகள் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து வந்த புகார்களை தொடர்ந்து, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சார்பாக, குறைந்தவிலை கவுன்டர்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

விமான நிலையங்களில் டீயின் விலை மிக அதிகளவில் இருப்பதாக, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, அதிகளவில் புகார்கள் வந்தநிலையில், பார்லிமென்டிலும், எம்.பி.க்கள் இதுதொடர்பாக குரல் எழுப்பினர்.

இந்நிலையில், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அதிகாரி கூறியதாவது, உயர்பிரிவு மக்கள் மட்டுமே பயன்படுத்திவந்த விமான பயணம், மத்திய அரசின் உடான் திட்டத்தின் மூலம் தற்போது அனைத்து மக்களும் விமான பயணம் மேற்கொள்ளும் வகையில் மாறியுள்ளது.

விமான நிலையங்களில், டீ, ஸ்நாக்ஸ் உள்ளிட்டைவைகளின் விலைகள் அதிகளவில் இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து, விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம் சார்பாக, குறைந்த விலை கவுன்டர்கள் அமைக்கப்பட இருப்பதாகவும், இதற்கான டென்டர்கள் விரைவில் விடப்பட இருப்பதாக அவர் கூறினார்.

மூலக்கதை