ஆஸ்திரேலியா ஏ ரன் குவிப்பு

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியா ஏ ரன் குவிப்பு

பெங்களூரு: இந்தியா ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (4 நாள் போட்டி), ஆஸ்திரேலியா ஏ அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 290 ரன் குவித்துள்ளது. ஆலூர் கர்நாடகா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 290 ரன் எடுத்துள்ளது. பேட்டர்சன் 48, டிராவிஸ் ஹெட் 68, ஆஷ்டன் ஏகார் 23 ரன் எடுக்க, ரென்ஷா மற்றும் லாபஸ்ஷேன் டக் அவுட்டாகினர். ஹேண்ட்ஸ்கோம்ப் 8 ரன்னில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் மிட்செல் மார்ஷ் 86 ரன் (151 பந்து, 13 பவுண்டரி), மைக்கேல் நெசர் 44 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா ஏ பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ஷாபாஸ் நதீம் தலா 2, கவுதம், குர்பானி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை