‘அலி­பாபா டாட் காம்’ நிறுவனர் ஜாக் மா ஓய்வு பெறுகிறார் சீனாவின், ‘நம்பர் – 1’ பணக்காரர்

தினமலர்  தினமலர்
‘அலி­பாபா டாட் காம்’ நிறுவனர் ஜாக் மா ஓய்வு பெறுகிறார் சீனாவின், ‘நம்பர் – 1’ பணக்காரர்

பீஜிங்:வலை­த­ளங்­களில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்­யும், ‘அலி­பாபா டாட் காம்’ நிறுவ­னத்தை நிறு­விய, ஜாக் மா, நாளை, தன், 54வது பிறந்த நாளன்று, தலைமை செயல் அதி­காரி பத­வி­யில் இருந்து ஓய்வு பெறு­கி­றார்.


ஆங்­கில பேரா­சி­ரி­யர்

இவர், சீனா­வில், மிக­வும் ஏழ்­மை­யான குடும்­பத்­தில் பிறந்து, 20 ஆண்டு­களில், ‘நம்­பர் – 1’ பணக்­கா­ர­ராக உயர்ந்­த­வர். இவ­ரது தந்தை, மாதம், 40 டாலர் ஓய்­வூ­தி­யத்­தில், குடும்­பத்தை நடத்­தி­ய­வர்.ஹங்சோ ஆசி­ரி­யர் கல்லுா­ரி­யில் பட்­டக் கல்வி முடித்து, ஆங்­கில பேரா­சிரி­ய­ராக பணி­புரிந்து வந்த ஜாக் மாவுக்கு, இணை­யத்­தின் அறி­மு­கம், புதிய வாசலை திறந்­தது.
ஆசி­ரி­யர் பணியைஉதறி, பின் தன் வீட்­டி­லேயே, ஒரு கம்ப்­யூட்டர் உத­வி­யு­டன், வலை­தளத்தில், பொருட்­களை வாங்கி, விற்­கும் சிறிய நிறு­வ­னத்தை துவக்­கி­னார்.


அவர் மீதுள்ள நம்­பிக்­கை­யில், 1999ல், அமெ­ரிக்க துணி­கர முத­லீட்டு நிறு­வ­னம் ஒன்று, 60 ஆயிரம் டாலர் நிதி­யு­தவி அளித்­தது.இதை­ய­டுத்து, ஜாக் மா, நண்­பர்­கள் சில­ரு­டன் இணைந்து, ‘அலி­பாபா’ என்ற வலை­தள சந்தை நிறு­வ­னத்தை துவக்கி­னார்.அதில் இருந்து அவர் வாழ்க்­கையே மாறி­யது. இன்று, உல­கில் பெரும் வெற்றி பெற்ற சில நிறு­வ­னங்­க­ளுள் ஒன்­றாக, 42,088 கோடி டாலர்மதிப்­பு­டன், அலி­பாபா விளங்­கு­கிறது.


ஜாக் மாவின் சொத்து மதிப்பு, 3,660 கோடி டாலர், அதா­வது, 2.56 லட்­சம் கோடி ரூபாய்.ரிலை­யன்ஸ் தலை­வர் முகேஷ் அம்­பா­னிக்கு முன், ஆசி­யா­வின்,‘நம்­பர் – 1’ பணக்­கா­ரர் என்ற பெரு­மை­யும், ஜாக் மாவுக்கு கிடைத்­தது.


கல்வி


‘வெளிப்­ப­டைத் தன்மை, துணிச்­ச­லான முயற்சி, புது­மை­யான கண்­டு­பி­டிப்­பு­களில் உள்ள ஆர்­வம் ஆகி­யவை தான், ஜாக் மாவின் வெற்­றிக்கு கார­ணம்’ என, அவர் நண்பர்கள் கூறு­கின்­ற­னர்.
‘‘ஒரு­வர், சம்­பா­தித்த பணம் அவ­ருக்கு மட்­டு­மின்றி, சமு­தா­யத்­திற்­கும் பயன்­பட வேண்­டும்,’’ எனக் கூறும் ஜாக் மா,ஓய்­வுக்கு பின், கல்விமுன்­னேற்­றத்­திற்கு பாடு­பட திட்­ட­மிட்­டுள்­ளார்.

உள்­ளு­ணர்வு


முதன் முத­லாக, இணை­யம் பயன்­ப­டுத்­திய போதும், விசைப்­ப­ல­கையை தொட்­ட­போ­தும், அவற்­றில், உல­கையே மாற்­றக் கூடிய ஏதோ ஒரு சக்தி இருப்­ப­தாக, என் உள்­ளு­ணர்வு கூறி­யது.

ஜாக் மா, நிறு­வ­னர், அலி­பாபா டாட் காம்


மூலக்கதை