மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா

PARIS TAMIL  PARIS TAMIL
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா

 தமன்னா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார். இப்படத்தின் வேலைகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

 
இப்படத்தை அடுத்து விஷாலுடன் ஜோடி சேர இருக்கிறார் தமன்னா. விஷால் தற்போது ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் முடிந்த பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
 
 
 
இப்படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு தொடங்க இருக்கிறது. நடிகை தமன்னா இதற்குமுன் ‘கத்தி சண்டை’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை