தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை: இன்றும் புதிய உச்சத்தை தொட்டது

PARIS TAMIL  PARIS TAMIL
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை: இன்றும் புதிய உச்சத்தை தொட்டது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தன.

இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், இன்றும் அதன் விலை அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.

இதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 41 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.54 காசுகளாகவும், டீசல் 47 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.64 காசுகளாகவும் உள்ளன.

மூலக்கதை