சமாஜ்வாதி கட்சியில் நடப்பது ஒளரங்சீப் கதை

தினமலர்  தினமலர்
சமாஜ்வாதி கட்சியில் நடப்பது ஒளரங்சீப் கதை

லக்னோ: சமாஜ்வாதி கட்சி்க்குள் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் மொகலாய மன்னர் ஒளரங்சீப்பை மகன் சிறையில் வைத்த கதை தான் நினைவுக்கு வருகிறது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யோகி ஆதித்யநாத்பேசியது, சமாஜ்வாதி கட்சிக்குள் நடக்கும் உள்குத்து அரசியலை நாடறியும், அண்ணன் முலாயமின் வலதுகரமாக இருந்த தம்பி சிவபால் யாதவ் கட்சியைவிட்டு வெளியேறினார். கட்சியை முலாயமின் மகன் அகிலேஷ் கைப்பற்றி தந்தையை செயல்படவிடாமல் முடக்கி வைத்துள்ளார். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது வரலாற்றில் மொகலாய மன்னர் ஓளரங்சீப்பை மகன் சிறையில் வைத்தது போன்று தான் நினைவுக்கு வருகிறது என்றார்.
இது குறித்து அகிலேஷ் கூறுகையில், மாநிலத்தில் ஜாதி அரசியலை முதல்வர் யோகி ஆதித்யநாத் நடத்தி வருகிறார். ஒரு சாமியாரை பா.ஜ.வினர் முதல்வராக்கியுள்ளனர். இவரது ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்றார்.

மூலக்கதை