ஆசிய கோப்பை அறிமுகம்

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை அறிமுகம்

துபாய்: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான டிராபி அறிமுக விழா துபாயில் நேற்று நடந்தது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் வரும் 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த தொடருக்கான கோப்பை துபாயில் நேற்று அறிமுகமானது.

மூலக்கதை