பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து 10ம் தேதி நாடு தழுவிய பந்த்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து 10ம் தேதி நாடு தழுவிய பந்த்

புதுடெல்லி:  பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை கண்டித்து நாடு தழுவிய அளவில் வருகிற 10ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

நாளுக்குநாள் அதிகரித்துவரும் விலையுயர்வு காரணமாக அனைத்து தரப்பினரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். விலைவாசி உயரும் அபாயம் உள்ளது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் சாதாரண மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.



எனவே காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 10ம் தேதி நாடு தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டத்துக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 11 லட்சம் கோடி எரிபொருள் திருட்டு, கலால் வரி மற்றும் வாட் வரியை உடனடியாக குறைக்க வேண்டும் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தப்படும்.

எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னார்வ அமைப்புகளும் இந்த கடையடைப்பில் கலந்து கொள்ள வேண்டும்’ என்றார். பெட்ரோல், டீசல் விலையுயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், வருகிற 10ம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது.



.

மூலக்கதை