சிலைகள் மாயமானதாக புகார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 2ம் நாளாக ஐஜி ஆய்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிலைகள் மாயமானதாக புகார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 2ம் நாளாக ஐஜி ஆய்வு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கடந்த 2015ல் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோயில் சிலைகள் மாற்றப்பட்டதாகவும், மூலவர் திருமேனியை மாற்றிவிட்டதாகவும் புகார் எழுந்தது.

இக்கோயிலில் மூலவர் திருமேனி, கோயிலில் உள்ள ஏராளமான சிலைகள் திருடப்பட்டதாக ரெங்கநாதர் பக்தரான ரங்கராஜநரசிம்மன் என்பவர் புகார் அளித்தார். இதுகுறித்து சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் நேற்று ரங்கம் கோயிலில் ஆய்வு செய்தனர். அப்போது மூலவர் திருமேனியில் பாதம் மாற்றம் செய்யப்பட்டதா என தலைமை பட்டரான முரளி பட்டரிடம் கேட்டபோது, சில மாற்றங்கள் செய்ததாக முரளி பட்டர் ஒப்புக் கொண்டார்.

மூலஸ்தானத்திலிருந்து வெளியே வந்த ஐஜி பொன்மாணிக்கவேல், ஆயிரங்கால் மண்டபம் சென்றார்.

அப்போது அங்கு சுதையால் செய்த யோகநரசிம்மர் மற்றும் பரமபதநாதருக்கான மாதிரி சிலைகள் இருந்ததை பார்த்தார். இது எதற்கு என கேட்டபோது, சிலைகளில் மாற்றம் இருந்ததால் மாதிரி சிலை செய்து, அதைப்பார்த்து தான் செய்வோம் என்றார்.

ஒரு சிலையில் மாற்றம் இருந்தால் அதை பார்த்தே செய்தால் போதுமே, எதற்காக மாதிரி சிலை செய்து, சிலை செய்ய வேண்டும் எனக்கேள்வி எழுப்பியதும், இணை ஆணையர் ஜெயராமன் பதில் சொல்லவில்லை. பின்னர் ஐஜி பொன்மாணிக்கவேல் கூறுகையில், ‘ஆய்வு செய்து அறிக்கையை 42 நாளில் தாக்கல் செய்வோம். எங்கள் பணி தொடரும்’ என்றார்.

இதற்கிடையே ரங்கம் கோயிலில் இன்று 2ம் நாள் ஆய்வு  தொடங்கியது. ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் இதில் ஈடுபட்டுள்ளனர்.



.

மூலக்கதை