கோஹ்லியை வெறுக்கும் ரோஹித் சர்மா?

PARIS TAMIL  PARIS TAMIL
கோஹ்லியை வெறுக்கும் ரோஹித் சர்மா?

இந்திய அணி கேப்டன் கோஹ்லிக்கும் ரோஹித் சர்மாவிற்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபடுகிறது. 
 
கோஹ்லிக்கும் தற்போது இந்திய ஒருநாள் அணியில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரோஹித் சர்மாவுக்கும் இடையே ஏதோ மோதல் உள்ளது என்பது சமூக வலைத்தளங்களில் அவர்களின் செயல்பாடுகல் மூலம் தெரியவந்துள்ளது. 
 
டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து கோஹ்லியை தனது நட்பு வட்டத்திலிருந்து ரோஹித் சர்மா நீக்கியுள்ளார். மேலும், கோஹ்லியை விமர்சனம் செய்து ரசிகர்கள் பதிவிட்டுள்ள போஸ்டுகளுக்கு ரோஹித் சர்மா லைக் செய்துள்ளார். 
 
இதனால் ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. எனினும் ரோஹித்தின் இந்த மாதியான செயல்களுக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. 

மூலக்கதை