சகா மீண்டும் சந்தேகம் | செப்டம்பர் 06, 2018

தினமலர்  தினமலர்
சகா மீண்டும் சந்தேகம் | செப்டம்பர் 06, 2018

புதுடில்லி: வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் சகா இடம் பெற மாட்டார் எனத் தெரிகிறது. 

தோனி ஓய்வுக்குப் பின் இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பராக தொடர்ந்து இடம் பெற்றார் சகா, 33. வலது தோளில் ஏற்பட்ட காயத்துக்கு ஆப்பரேஷன் செய்த இவர் ஓய்வில் உள்ளார். இவருக்குப் பதில் முதலில் பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக், ரிஷாப் பன்ட் என பலர் இந்திய அணியில் இடம் பெற்றனர். இருப்பினும் யாரும் தேறவில்லை. 

இதனிடையே சகா குறைந்தது நான்கு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இவர் இடம் பெற மாட்டார் எனத் தெரிகிறது. இதுகுறித்து சகா கூறியது:

தற்போதைக்கு களத்துக்கு திரும்புவது குறித்து எதுவும் யோசிக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வருவதை மட்டுமே எனது இலக்கு. கடந்த இரு நாட்களாக பெங்களூரு அகாடமியில் மறுவாழ்வு பயிற்சியை துவக்கியுள்ளேன். எப்படியும் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தேவைப்படும் எனத் தெரிகிறது. இதனால் ஓய்வில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை