இந்தியா ‘ரெட்’ அணி ‘பாலோ–ஆன்’ | செப்டம்பர் 06, 2018

தினமலர்  தினமலர்
இந்தியா ‘ரெட்’ அணி ‘பாலோ–ஆன்’ | செப்டம்பர் 06, 2018

நத்தம்: துலீப் டிராபி பைனலில் இந்தியா ‘புளு’ அணியின் சுவப்னில் சிங் ‘சுழலில்’  அசத்தினார். முதல் இன்னிங்சில் 182 ரன்னுக்கு சுருண்ட இந்தியா ‘ரெட்’ அணி ‘பாலோ–ஆன்’ பெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடக்கும் துலீப் டிராபி பைனலில் இந்தியா ‘ரெட்’, ‘புளு’ அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் இந்தியா ‘புளு’ அணி 541 ரன்கள் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்தியா ‘ரெட்’ அணி ஒரு விக்கெட்டுக்கு 27 ரன் எடுத்திருந்தது. சஞ்சய் (9), சந்தீப் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

சுவப்னில் அசத்தல்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய ‘ரெட்’ அணிக்கு சஞ்சய் ராமசாமி (18) ஏமாற்றினார். அஷுதோஷ் சிங் (11) ‘ ரன்–அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய பவானகா சந்தீப் (57) அரைசதம் கடந்தார். சுவப்னில் சிங் ‘சுழலில்’ இஷான் கிஷான் (0), சித்தேஷ் லத் (8), விரித்திக் சாட்டர்ஜீ (19), மிஹிர் ஹிர்வானி (12) சிக்கினர். தீபக் ஹூடா பந்தில் பர்வேஸ் ரசூல் (22), பிரசித் கிருஷ்ணா (25) வெளியேறினர்.

முதல் இன்னிங்சில் இந்தியா ‘ரெட்’ அணி 182 ரன்னுக்கு சுருண்டு ‘பாலோ–ஆன்’ பெற்றது. இந்தியா ‘புளு’ அணி சார்பில் சுவப்னில் சிங் 5, குல்கர்னி, ஹூடா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

மீண்டும் திணறல்:  பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா ‘ரெட்’ அணிக்கு கேப்டன் அபினவ் முகுந்த் (46) நல்ல துவக்கம் தந்தார். சவுரப் குமார் பந்தில் சஞ்சய் ராமசாமி (11), சந்தீப் (22) அவுட்டாகினர். தீபிக் ஹூடா பந்தில் அஷுதோஷ் சிங் (5), சித்தேஷ் லத் (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். மூன்றாம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் இந்தியா ‘ரெட்’ அணி 5 விக்கெட்டுக்கு 128 ரன் எடுத்து 231 ரன் பின்தங்கி இருந்தது. இஷான் கிஷான் (25), விரித்திக் சாட்டர்ஜீ (13) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா ‘புளு’ அணி சார்பில் சவுரப் குமார் 3, ஹூடா 2 விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை