டிரம்ப் - கிம் இடையே மீண்டும் மோதல்?

PARIS TAMIL  PARIS TAMIL
டிரம்ப்  கிம் இடையே மீண்டும் மோதல்?

கடந்த ஆண்டு உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.
 
ஆனால் இது எதையும் வடகொரியா கண்டுக்கொள்வதாக இல்லை. எனவே, ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதித்தது. 
 
இதன் பின்னர் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் பல மாற்றங்களை கொண்டு வந்தது. வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து டிரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெற்றது. 
 
இந்த சந்திப்பில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்காவின் பேச்சிற்கு இணங்கி வடகொரியா அணு ஆயுதங்களை அழிக்க முடிவு செய்தது. ஆனால், தற்போது தென்கொரியா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்க அதிபர் மீது கிம் நம்பகத்தன்மை இல்லமால் இருக்கிறார். டிரம்பின் பதவிக்காலம் முடிவதற்குள் வடகொரியா அதன் அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால், கிம் தரப்போ அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து தவறாக ஏதும் கூறவில்லை என்று கூறியிருக்கிறார்.
 

மூலக்கதை