பைனலில் இந்தியா ‘புளூ’ | ஆகஸ்ட் 31, 2018

தினமலர்  தினமலர்
பைனலில் இந்தியா ‘புளூ’ | ஆகஸ்ட் 31, 2018

நத்தம்: துலீப் டிராபி போட்டி, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்., மைதானத்தில் நடக்கிறது. லீக் போட்டியின்  முதல் இன்னிங்சில் இந்தியா ‘புளூ’ 340, இந்தியா ‘கிரீன்’ 257 ரன்கள் எடுத்தன.

நேற்றைய 4ம் நாள் ஆட்டத்தில் துருவ் ஷோரே (40) தவிர, மற்றவர்கள் ஏமாற்ற 2வது இன்னிங்சில் இந்தியா ‘புளூ’ அணி 117 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா ‘கிரீன்’ அணி சார்பில் ஆதித்யா சர்வாதே 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின், 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா ‘கிரீன்’ அணி 2 விக்கெட்டுக்கு 20 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட ஆட்டம்  முடிவுக்கு வந்தது. போட்டி ‘டிரா’ ஆனது.

முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் இந்தியா ‘புளூ’ அணி 3, இந்தியா ‘கிரீன்’ அணி ஒரு புள்ளி பெற்றன. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த இந்தியா ‘ரெட்’ (6 புள்ளி), இந்தியா ‘புளூ’ (4) அணிகள் பைனலுக்கு (செப். 4–8) முன்னேறின. இந்தியா ‘கிரீன்’ (2 புள்ளி) வெளியேறியது.

மூலக்கதை