சிராஜ் ‘8’: சுருண்டது ஆஸி., | செப்டம்பர் 02, 2018

தினமலர்  தினமலர்
சிராஜ் ‘8’: சுருண்டது ஆஸி., | செப்டம்பர் 02, 2018

பெங்களூரு: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் இந்திய ‘ஏ’ அணியின் சிராஜ் 8 விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலியா ‘ஏ’, இந்தியா ‘ஏ’ அணிகள் மோதிய முதல் போட்டி (நான்கு நாள்) பெங்களூருவில் துவங்கியது.

‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங் தேர்வு செய்தார்.

சிராஜ் மிரட்டல்

ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே முகமது சிராஜ் ‘செக்’ வைத்தார். இவரது ‘வேகத்தில்’ பாட்டர்சன் (31), டிராவிஸ் ஹெட் (4), ஹோண்ட்ஸ்கோம்ப் (0), மிட்சல் மார்ஷ் (0) அடுத்தடுத்து சிக்கினர். மார்னசை (60) வெளியேற்றி இவர், 5வது விக்கெட்டை கைப்பற்றினார். பொறுப்புடன் விளையாடிய கவாஜா (127) சதம் கடந்தார். மற்ற வீரர்களும் சொதப்ப, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 8 விக்கெட் சாய்த்தார்.

பின், முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்து, 202 ரன்கள் பின்தங்கி இருந்தது. ரவிகுமார் சமர்த் (10), மயங்க் அகர்வால் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

மூலக்கதை