கோஹ்லி மீண்டும் ‘நம்பர்–1’ | செப்டம்பர் 03, 2018

தினமலர்  தினமலர்
கோஹ்லி மீண்டும் ‘நம்பர்–1’ | செப்டம்பர் 03, 2018

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, முதன்முறையாக 937 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். இதன்மூலம் இவர், டெஸ்ட் தரவரிசை வரலாற்றில் அதிக ‘ரேட்டிங்’ புள்ளிகள் பெற்ற வீரர்கள் பட்டியலில் 11வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் (961 புள்ளி) உள்ளார். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடந்த 4வது டெஸ்டில் 46, 58 ரன் எடுத்த கோஹ்லி, இத்தொடரில் அதிக ரன் (544) குவித்த வீரர்களுக்கான பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

சவுத்தாம்ப்டன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் சதமடித்த இந்திய வீரர் புஜாரா, 798 புள்ளிகளுடன் 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

ஷமி முன்னேற்றம்: பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, 670 புள்ளிகளுடன் 22வது இடத்தில் இருந்து 19வது இடத்துக்கு முன்னேறினார். .அஷ்வின் 777 புள்ளிகளுடன் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

முதல் மூன்று இடங்களில் இங்கிலாந்தின் ஆண்டர்சன், தென் ஆப்ரிக்காவின் ரபாடா, இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா உள்ளனர்.

மூலக்கதை