குக், ஜென்னிங்ஸ் மீண்டும் வாய்ப்பு | செப்டம்பர் 04, 2018

தினமலர்  தினமலர்
குக், ஜென்னிங்ஸ் மீண்டும் வாய்ப்பு | செப்டம்பர் 04, 2018

ஓவல்: இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிற்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் குக், ஜென்னிங்ஸ் தக்க வைக்கப்பட்டனர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டி முடிவில் இந்திய அணி தொடரை 1–3 என இழந்துள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 7ல் லண்டன் ஓவலில் துவங்குகிறது.

இதற்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு போட்டியிலும் ஏமாற்றிய அலெஸ்டர் குக் (109 ரன்), ஜென்னிங்ஸ் (130 ரன்) ஜோடிக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஓவல் டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச அரங்கிலிருந்து விடை பெறுவதால் குக்கை கவுரவமாக வழியனுப்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்சி மீண்டும் கவுன்டி சாம்பியன்ஷிப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளார். நாட்டிங்காம் டெஸ்டில் பங்கேற்காத போப் மற்றும் காயத்திலிருந்து மீண்ட வோக்ஸ் திரும்பி உள்ளனர். மற்றபடி, மொயீன் அலி, கர்ரான், ஸ்டோக்ஸ் தங்களது இடத்தை தக்கவைத்துக்கொண்டனர்.

அணி விவரம்: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஆண்டர்சன், பேர்ஸ்டோவ், பிராட், பட்லர், குக், கர்ரான், ஜென்னிங்ஸ், போப், ரஷித், ஸ்டோக்ஸ், வோக்ஸ்.

 

மூலக்கதை