ஆர்.பி.சிங் ஓய்வு | செப்டம்பர் 04, 2018

தினமலர்  தினமலர்
ஆர்.பி.சிங் ஓய்வு | செப்டம்பர் 04, 2018

புதுடில்லி: கிரிக்கெட் அரங்கில் இருந்து ஆர்.பி.சிங் ஓய்வு பெற்றார். 

இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ருத்ர பிரதாப் சிங்(சுருக்கமாக ஆர்.பி.சிங்), 32. உ.பி.,யை சேர்ந்த இவர், 2005, செப். 4ல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகம் ஆனார். 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார். 6 போட்டியில் 13 விக்கெட் சாய்த்தார். 

தனது 13 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் 14 டெஸ்ட் (40 விக்.,), 58 ஒருநாள் (69 விக்.,) மற்றும் 10 ‘டுவென்டி–20’ (15) போட்டிகளில் பங்கேற்றார். கடைசியாக 2011ல் இங்கிலாந்துக்கு எதிரான கார்டிப் டெஸ்டில் விளையாடினார்.

அறிமுகம் ஆன அதே நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ முதன் முறையாக இந்திய அணியின் ஜெர்சி அணிந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது எனது வாழ்க்கையில் மிக முக்கியமான, மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. இன்று ஓய்வு பெறுகிறேன். எனது கிரிக்கெட் பயணத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி,’ என தெரிவித்துள்ளார்.

 

மூலக்கதை