இந்திய ‘ஏ’ அணி ஏமாற்றம் | செப்டம்பர் 05, 2018

தினமலர்  தினமலர்
இந்திய ‘ஏ’ அணி ஏமாற்றம் | செப்டம்பர் 05, 2018

பெங்களூரு: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்டில் இந்திய ‘ஏ’ அணி98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி, 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இந்திய ‘ஏ’ அணியுடன் மோதுகிறது. முதல் போட்டி பெங்களூருவில்நடந்தது.முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 243, இந்தியா 274 ரன்கள் எடுத்தது.ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 292 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 262 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில்2 விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (25), பாவ்னே (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹாலந்து அபாரம்: நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இந்தியா ‘ஏ’ அணிக்கு ஜான் ஹாலந்து தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ பாவ்னே (25), கவுதம் (0), சிராஜ் (8) உள்ளிட்டோர் சிக்கினர். மயங்க் அகர்வால் (80) மட்டும் அரை சதம் அடித்து ஆறுதல் அளித்தார். மற்றவர்கள் ஏமாற்ற, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஹாலந்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி வரும் 8ம் தேதி இதே மைதானத்தில் துவங்குகிறது.

மூலக்கதை