தெலுங்கானாவுக்கு தேர்தல் எப்போது: ராவத் இன்று ஆலோசனை

தினமலர்  தினமலர்
தெலுங்கானாவுக்கு தேர்தல் எப்போது: ராவத் இன்று ஆலோசனை

புதுடில்லி: தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை டில்லி தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இன்று ஆலோசிக்கிறது.
இந்நிலையில் இந்தாண்டு டிசம்பரில் மஹாராஷ்டிரா, சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து இன்று அறிவிப்பு வெளியிட உள்ளது. தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கையில், தெலுங்கானா மாநில வரைவு வாக்காளர் பட்டியல் இன்னும் சரிபார்க்கப்படவில்லை. எனவே சட்டசபை தேர்தல் ஜனவரியில் நடக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை