உ.பியில் கனமழை உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆனது

தமிழ் முரசு  தமிழ் முரசு
உ.பியில் கனமழை உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆனது

லக்னோ: உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

வீடுகள், சாலைகள், தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது.    கனமழை காரணமாக கான்பூர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு, கங்கை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது.

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 15,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

உத்தரபிரதேசத்தில், அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.   இதையடுத்து, உஷார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

.

மூலக்கதை