கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் பிரபல இந்திய வீரர்!

PARIS TAMIL  PARIS TAMIL
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் பிரபல இந்திய வீரர்!

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளராக சர்வதேச போட்டிகளில் ஆடிய ஆர்.பி. சிங் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.
 
இடது கை வேகப் பந்துவீச்சாளரான அவர் 2005ஆம் ஆண்டு தன் முதல் சர்வதேச போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமானார்.
 
சில ஆண்டுகள் இந்திய அணியில் ஆடியவருக்கு, காயம் மற்றும் பார்ம் அவுட் காரணங்களால் அணியில் இடம் கிடைக்காமல் போனது. பின் ஐபிஎல் போட்டிகளில் சில ஆண்டுகள் ஆடினார்.
 
கடந்த ஆண்டு வரை உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்த ஆர்.பி சிங் தன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக இதுவரை 14 டெஸ்ட், 58 ஒருநாள் போட்டிகள், 10 டி20 போட்டிகள் ஆடியுள்ளார்.
 
டெஸ்டில் 40 விக்கெட்களும், ஒருநாள் போட்டிகளில், 69 விக்கெட்களும், டி20 போட்டிகளில் 15 விக்கெட்களும் எடுத்துள்ளார்.
 

மூலக்கதை