இந்திய அணி தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும்: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய அணி தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும்: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை

லண்டன்: விராட் போராடும் குணம் என்று எடுத்துக் கொண்டால், வெளி நாடுகளில் இதுவரை ஆடிய இந்திய கிரிக்கெட் அணிகளில் இந்த அணிதான் பெஸ்ட் என்று தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, இருப்பினும் தற்போதைய பிரச்னை போராடுவது அல்ல, வெற்றி பெறுவது என்று அணி வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து லண்டனில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை இழந்து விட்டது.

சற்று எச்சரிக்கையுடன் சௌத்தாம்ப்டனில் ஆடியிருந்தால், 2-2 என்ற சமநிலையில் இருந்திருப்போம். மொயின் அலியின் சிறப்பான பந்து வீச்சு, இந்திய அணியிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டது என்றே கூற வேண்டும்.

முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்த இந்திய அணி, எச்சரிக்கையுடன் ஆடியிருந்தால் 80 ரன்கள் வரை முன்னிலை பெற்றிருக்கக் கூடும்.

நல்ல நிலையில் இருந்து விட்டு, பின்னர் வெற்றியை கோட்டை விட்டது, மனதுக்கு காயமளிக்கிறது. ஆனால் கடந்த 15, 20 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணியில், இந்த அணிதான் பெஸ்ட் என்று எனக்கு தோன்றுகிறது.

இந்த அணியின் வீரர்கள் மனதளவில் போராட்ட குணம் அதிகம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் தற்போதைய பிரச்னை வெற்றி பெறுவதுதான்.

அந்த இலக்குடன்தான் அணியின் வீரர்கள் ஆடியாக வேண்டும். விராட் கோஹ்லி தலைமையிலான இந்த அணி, நிச்சயம் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளும்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பயணம் முடிந்த பின்னர், துபாயில் வரும் 15ம் தேதி துவங்க உள்ள ஆசிய கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி ஆடவுள்ளது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகளை சேர்ந்த அணிகள் ஆசிய கோப்பைக்கான போட்டிகளில் ஆடுகின்றன.

இந்த போட்டித் தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை